Friday, February 28, 2014

பாட்டி வைத்தியம்

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்:
மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா.. எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.
Diarrhea: 
சிலருக்கு வயித்துப்போக்கு வந்து பாடாபடுத்தும். இப்போ நான் சொல்லப் போற வைத்தியத்தை அந்த மாதிரி நேரங்கள்ல பயன்படுத்தினா, சட்டுனு குணம் கிடைக்கும்
****அங்குல அளவுக்கு மஞ்சளை எடுத்து, சின்னச் சின்ன துண்டா நறுக்கி, பாத்திரத்துல போட்டு, மஞ்சள்ல தீப்பொறி பறக்கற அளவுக்கு வறுக்கணும். அதுல ஒரு ஸ்பூன் ஓமத்தைப் போட்டு, அது வெடிக்கற நேரத்துல மூணு வெத்தலையை பிய்ச்சுப் போடணும். பிறகு, ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தி கொதிக்க வைக்கணும். வடிகட்டின அந்த நீரை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவங்களுக்கு கால் டம்ளரும் கொடுத்தா... வயித்துப்போக்கு சரியாகும்.

cold and cough:
பொதுவாவே, மஞ்சளை நெருப்புல சுட்டோ... இல்ல, நல்லெண்ணெயில முக்கி நெருப்புல சுட்டோ... புகையை சுவாசிச்சா... மூக்கடைப்பு தொடங்கி, தலைவலி, ஜலதோஷம், தும்மல் எல்லாம் சட்டுனு நின்னுரும்.
ஐம்பது மில்லி பால்ல அதே அளவு தண்ணியை சேர்த்து, உறிச்ச வெள்ளைப்பூண்டு 10 பல் போட்டு, நல்லா வேக வைக்கணும். பூண்டு வெந்து, பால் பாதியா வத்தினதும்... மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கல்கண்டு சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தால கடைஞ்சி குடிச்சா... நெஞ்சுச்சளி, மூக்குல தண்ணி கொட்டுறதுனு சளித்தொல்லை எல்லாம் சரியாகும்.

*அறிகுறிகள்:
  1. சளி.
  2. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆரஞ்சு.
  2. அன்னாசி.
  3. பப்பாளி.
  4. துளசி.
  5. காரட்.
  6. புதினா.
  7. கொத்தமல்லி.
  8. முருங்கை.
  9. தேங்காய்.
  10. தேன்.
  11. பேரீட்சை.
  12. திராட்சை.
செய்முறை:
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, துளசி, காரட், புதினா, கொத்தமல்லி, முருங்கை, தேங்காய் பால், தேன், பேரீட்சை, திராட்சை இவைகளை சாறு எடுத்து குடித்துவர குளிர்னால் ஏற்படும் சளியை குறைக்கலாம்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/பாட்டியின்-குழந்தை-வைத்த/page/17/#sthash.vuMG5eE7.dpuf
cold and fever:
* ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

* துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

* ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.


  1. உடல் சூடாக இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
  1. நெல்லிக்காய்.
செய்முறை:
நெல்லிக்காய் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு பருக கொடுத்தால் சூடு தணியும்.

Baby food:
அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
  1. புழுங்கல் அரிசி.
  2. ஓமம்.
  3. பால்.
  4. சீனி.
செய்முறை:
  • புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் வெயில் உலர்த்தி இரண்டாக உடைத்துத்  தண்ணீர் விட்டு அரைத்து 15 கிராம் ஓமமத்தில் போட்டு நன்கு பிசறிக் காயவைக்க வேண்டும். பிறகு பாத்திரத்தில் கொட்டி பொன்னிறமாக வறுத்து, நன்றாகத் தேய்த்து ஊதி, ஓமத்தைப் போக்கி விட்டு, மாவாகத் திரித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டும் போது கொஞ்சம் மாவைப் போட்டு தண்ணீர் விட்டு காய்ச்சி அதனுடன் பாலும், சீனியும் கலந்து சாப்பிட கொடுக்கலாம்.
பார்லிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
  1. பார்லி அரிசி.
  2. பால்.
  3. சீனி.
செய்முறை:
  • பார்லி அரிசியை இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவேண்டும். உடைத்ததிலிருந்து இரண்டு தேக்கரண்டி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி அதில் பால், சீனி கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.
ஜவ்வரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
  1. ஜவ்வரிசி
செய்முறை:
  • ஜவ்வரிசி இரண்டு தேக்கரண்டி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைத்து வடிகட்டிய தண்ணீருடன் பால் சீனி சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.
அரோரூட் கஞ்சி
தேவையான பொருட்கள்:
  1. அரோரூட் மாவு
செய்முறை:
  • அரோரூட் மாவை வேண்டிய அளவு குளிர்ந்த தண்ணீரில் கரைத்துப் பிறகு போதுமான அளவு தண்ணீர் விட்டுக் கட்டி படாமல் கிளறவேண்டும். கஞ்சிப் பதம் வந்ததும் சீனி போட்டுச் சாப்பிட கொடுக்கவேண்டும். கெட்டியாக இராமல் இந்தக் கஞ்சி தண்ணீர் பாகமாக இருக்கவேண்டும்.
தீரும் நோய்கள்:
  • காய்ச்சல், அஜீரணம், வயிற்றுப் போக்கு, மாந்தம் ஆகிய நோய்களை குறையச் செய்யும்.
இவை அனைத்தும் கஞ்சி வகைகள் ஆகும். இந்த கஞ்சி வகைகளை சரியான முறையில் குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோயற்றும் காணப்படும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/page/3/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&search=Search#sthash.LotdYMQ7.dpuf
Fever: 
அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
  • ஜலதோஷம்.
தேவையான பொருட்கள்:
  1. புதினா கீரை.
  2. மிளகு.
  3. சீரகம்.
  4. சுக்கு.
செய்முறை:
ஒரு கைப்பிடியளவு புதினா கீரையை சட்டியிலிட்டு வதக்கி அத்துடன் மிளகு, சீரகம் அரை தேக்கரண்டி, சுக்கு துண்டு பாக்கு அளவு ஆகியவற்றை நைத்துப்போட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி அதை மூன்று பங்காக்கி காலை, மதியம், மாலை என மூன்றுவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் எவ்விதமான காய்ச்சலும் குறையும்.

****அறிகுறிகள்:
  • காய்ச்சல.
  • உடல்வலி.
  • ஜலதோஷம்.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி சாறு.
  2. இஞ்சிச்சாறு.
  3. தேன்.
செய்முறை:
துளசி சாறு, இஞ்சிச்சாறு இரண்டையும் சமஅளவு எடுத்துத் தேன் கலந்து தினமும் மூன்றுவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

*****அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. எலுமிச்சைச்சாறு.
  2. இஞ்சிச்சாறு.
  3. தேன்.
செய்முறை:
சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டி தேனில் சிறிது எலுமிச்சைச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

****அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. இலவங்கப்பட்டை தூள்.
  2. மிளகுத்தூள்.
  3. தேன்.
செய்முறை:
ஒரு டம்ளர் நீரில் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள், 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் போட்டு நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்:
  1. காய்ச்சல்.
  2. உடல் வலி.
தேவையான பொருள்கள்:
  1. ஓமம்.
  2. இலவங்கப்பட்டை.
செய்முறை:
சம அளவு ஓமத்தையும், இலவங்கப்பட்டையையும் எடுத்து அதனுடன் 500 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து நீர் பாதியாக சுண்டியதும் அதை இறக்கி வடிகட்டி காய்ச்சலின் போது இந்த நீரை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

****அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
  • குடல் புண்கள்.
  • தோலில் கொப்புளங்கள்.
தேவையான பொருள்கள்:
  1. துளசி இலை.
  2. குங்குமப்பூ.
  3. மிளகு.
  4. பால்.
செய்முறை:
4 துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது குங்குமப்பூ, 7 மிளகுகள் சேர்த்து விழுதாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் நன்கு உலர்த்தி வைத்து கொள்ளவும். காய்ச்சலின் போது தினமும் 2 அல்லது 3 வேளைகள் ஒரு மாத்திரை வீதம் இளஞ்சூடான பாலுடன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் ஏற்படும் குடல் புண்கள், தோலில் கொப்புளங்கள் ஆகியவை குறையும்.



- See more at: http://www.grannytherapy.com/tam/page/11/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&search=Search#sthash.CKnBupzp.dpuf

Before Fever:
அறிகுறிகள்:

  • உடல் வலி.
  • ஜலதோஷம்.
  • சளி.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கருந்துளசி.
  2. சுக்கு.
  3. நாட்டுச் சர்க்கரை.
செய்முறை:
கருந்துளசி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இடித்து லேகியம் போல் செய்து காய்ச்சல் வருவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.
குறிப்பு:
எண்ணெய், புளி, மிளகாய் ஆகியவற்றை மருந்து சாப்பிடும் போது சேர்க்க கூடாது.


குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

ஹெல்த் மிக்ஸ்என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா?

பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன்

ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் கூடிய ஒரே பொருள் ஹெல்த் மிக்ஸ்தான். கோதுமை, ராகி, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக இருப்பார்கள்

கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரோட்டீன் என எல்லாம் கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு

இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும். நல்ல தரமான மிக்ஸை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். வீட்டில் நாமேகூட செய்து கொள்ளலாம்

ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, வறுத்த கடலைப்பருப்பு, சிவப்பரிசி, கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம், கொள்ளு, மொச்சை, கம்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, வறுத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடியாக்கிக் கலந்து வைத்து பயன்படுத்தலாம்.




No comments:

Post a Comment