Friday, February 28, 2014

சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு



From Face Book:


பீட்ரூட் கீர்: 

சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக
இதைத் தரலாம்.

வாழைப்பூ சட்னி:

நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய
இஞ்சி, உப்பு கலந்து அரைக்க... வாழைப்பூ சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு சட்னியாகவோ, சாதத்துக்குத் துவையலாகவோ பயன்படுத்தலாம். ரத்தவிருத்தி மட்டுமல்ல... நாகரிகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலை போக்கவல்லது வாழைப்பூ.

முருங்கைக்கீரை சூப்:

கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, தோல் நீக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்கினால்... அசத்தலான அயர்ன்
சக்திக்கான சூப் தயார்.

ரத்த சுத்திக்கான புதினா ஜூஸ்:

கைப்பிடி அளவு புதினா தழைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, சுவைக்கு நூறு கிராம் வெல்லம் சேர்த்து, சுமார் அரை லிட்டர் நீர் கலந்தால்... வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச்
சீராக்கும் சுலபமான புதினா ஜூஸ் கிடைக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும் என்பதோடு, சிறுநீர் தொடர்பான தடை மற்றும் எரிச்சலை இந்த ஜூஸ் குணமாக்கும்.

ரத்த விருத்திக்கான பழ சாலட்:

கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடத் தரலாம். மாலை வேளையில் ருசிக்கத் தோதான ஸ்நாக்ஸ் இது.

ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்:

கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சிறிதளவு வறுத்த மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை கலர்ஃபுல்லாக மேலே தூவினால், சுலபமாக நிமிடத்தில் காய்கறி சாலட் ரெடி.

கொத்தமல்லி ஜூஸ்:

ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து, 100 கிராம் வெல்லம் சுவைக்குச் சேர்த்தால்... ரத்த அழுத்தத்தை சீராக்கி வளப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ் தயார். சுலபமான ஜீரணத்துக்கு உதவுவதுடன், பசியைத் தூண்டவல்ல எளிய தயாரிப்பு இது.

வாழைப்பூ மடல் சூப்:

வாழைப்பூவின் இளம் மடல் ஒன்றை சிறுதுண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து
வடிகட்டினால்... ஹீமோகுளோபின் வளத்துக்கான வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம்.

சுவைக்காக சேர்க்கும் வெல்லம், பனை வெல்லமாக இருத்தல் நல்லது. மாற்றாக தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.''


உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம்காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம்ஓமம் - 10 கிராம்பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவுசிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால்கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றதுகால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை
முற்றாத பிரண்டை - 50 கிராம்மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிநெய்உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கிநெய்விட்டு வதக்கவும்பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கிதுவையலாக அரைக்கவும்சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும்உடற்பருமன் குறையும்நரம் புத் தளர்ச்சிஎலும்புத் தேய்மானம் குண மாகும்மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை
தோசை மாவு - அரை கிலோசீரகம் - 25 கிராம்சோம்பு - அரை தேக்கரண்டிபூண்டு - 4 பல்வெந்தயக் கீரை - 100 கிராம்எண்ணெய்உப்புமஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை
சீரகம்சோம்புபொடியாக நறுக்கிய பூண்டுமஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும்சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கிதோசை வார்க்கவும்அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவிவெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்ததுஎலும்புகளைப் பலப்படுத்தும்வயிற்றுப் பூச்சிகளை அகற்றும்கெட்ட கொழுப்பைக் குறைக்கும்சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை
கறிவேப்பிலை - 2 கைப்பிடிபச்சரிசி மாவு - கால் கிலோகருப்பட்டி - 100 கிராம்சீரகம்மிளகு - தலா அரை தேக்கரண்டிமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டுதேங்காய் - அரை மூடி.

செய்முறை
சீரகம்மஞ்சள் தூள்மிளகுசுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்தேங்காயைத் துருவிக்கொள்ளவும்ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்கருப்பட்டியைப் பாகு காய்ச்சிமற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும்பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்


சர்க்கரை நோய்எலும்புத் தேய்மானம்தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்துஉடல் பலவீனம்வலிஅசதிசோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும்ஆவியில் வேகவைத்து எடுப்பதால்எளிதில் ஜீரணமாகும்.

உடல் இளைக்க மோர்க்கூழ்

உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம் ஸ்லிம் ஆகிடுவீங்க.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
சோயா மாவு – 1/4 கப்
தண்­ணீர் – 2 கப்
மோர் – 2 கப்
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீ­ர் ஊற்றவும்.

* இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளறவும்.

* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

* முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.

* சூடாக சாப்பிட்டால் தேவாம்ருதம்தான். உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.

No comments:

Post a Comment